- திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானம்
- திருவண்ணாமலை
- திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கம்
- திருவண்ணாமலை
- கலெக்டர்
- பாஸ்கரா பாண்டியன்
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
- மாவட்டம்
- விளையாட்டு
- சிக்கலான
திருவண்ணாமலை, மே 1: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயல்படும் நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பு வரும் ஜூன் மாதம் வரை நடைபெறும். அதில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் நீச்சல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு நீச்சல் பயிற்சி பெறலாம். பயிற்சி வகுப்புகள் 12 வேலை நாட்கள் நடத்தப்படும். அதற்கான பயிற்சி கட்டணம் ₹1,500 என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது. நீச்சல் பயிற்சி பெறுவோர் அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசரைப் பயன்படுத்த வேண்டும். சளி அல்லது இருமல் இருக்கும் பட்சத்தில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். காய்ச்சல், இருமல், தசை வலி, தலை வலி, அனோஸ்மியா போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் நீச்சல் குளத்தினை பயன்படுத்த அனுமதியில்லை. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு ஏற்பாடு கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் appeared first on Dinakaran.