×

பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு எதிரொலி: ஆலப்புழாவில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை நீடிப்பு


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் பல்வேறு பகுதிகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மே 8ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் பறவை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான வாத்துப் பண்ணைகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துகள் திடீர் திடீரென செத்தன. இதையடுத்து கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோயை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்க ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் பாதித்த பகுதிகளில் உள்ள வாத்துகள் கொன்று எரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நோய் பாதித்த பகுதிகளில் கோழி, வாத்து, காடை இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் நோய் இதுவரை கட்டுக்குள் வரவில்லை. ஆகவே ஆலப்புழா, தகழி, நெடுமுடி, சம்பக்குளம், எடத்துவா உள்பட 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை மே 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலப்புழா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

The post பறவைக்காய்ச்சல் அதிகரிப்பு எதிரொலி: ஆலப்புழாவில் இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை நீடிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,Alappuzha ,Kerala State ,Alappuzha District ,Avian ,Aleppo ,
× RELATED ஆலப்புழா அருகே மீன் பிடித்தபோது குளத்தில் மூழ்கி மாணவி பலி