×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு ஊருக்கு ஆலை மூடிவைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பல்வேறு கழிவுப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிவுப்பொருட்கள் திடீரென கரும்புகை கொண்டு எரிய தொடங்கியது.

இந்த தீ விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 2 வாகனங்களில் வந்த பொன்னேரி குமிடிபூண்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலை என்பதால் யாருக்கும் தீக்காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பகுதியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Siruvapuri ,Ponneri ,Tiruvallur district ,Tiruvallur ,Thiruvallur… ,Thiruvallur district ,Dinakaran ,
× RELATED பழவேற்காடு பகுதியில் அடையாளம்...