×

வீரபாண்டி சித்திரைத் திருவிழா தேரோட்டம் மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை

தேனி, ஏப். 30: தேனி அருகே வீரபாண்டியில் நடக்கும் சித்திரைத் திருவிழா தேரோட்டத்திற்காக வருகிற மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலில் வருகிற மே மாதம் 7ம்தேதி தொடங்கி மே 14ம் தேதி வரை 8 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற மே 10ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது. இந்த தேரோட்டத்தையொட்டி அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த துறைகள், அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம், சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டுகுறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதையொட்டி, இதற்கு ஈடு செய்யும் வகையில் வருகிற மே மாதம் 25ம் தேதி மாற்று வேலைநாளாக செயல்படும் எனவும் கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

The post வீரபாண்டி சித்திரைத் திருவிழா தேரோட்டம் மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Veerapandi Chitrait Festival ,Theni ,Chariot Festival ,Veerapandi ,Gaumariamman ,Veerapandi Chitrait Festival Chariot ,
× RELATED ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்