×
Saravana Stores

சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் ஆவணியாபுரம் நரசிம்மர் கோயிலில்

பெரணமல்லூர், ஏப்.30: பெரணமல்லூர் அருகே நேற்று நடைபெற்ற பிரமோற்சவ தோரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சித்திரை மாதம் முன்னிட்டு கடந்த 23ம்தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்கியது. விழாவில் தொடர்ந்து இரவு நேரங்களில் அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்தவாகனம், சேஷவாகனம், கருட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மேலும் 27ம்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி காலை 8 மணிக்கு உற்சவ மூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு பட்டாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மேளதாள ஊர்லலத்துடன் தேரில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் 9மணியளவில் பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா பக்தி முழக்கத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேரானது சிம்ம மலையை சுற்றி வந்து மாடவீதி வழியாக இழுத்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சுதர்சனம், அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் ஆவணியாபுரம் நரசிம்மர் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Avaniapuram Narasimha Temple ,Chitrai month ,Pramotsava ,Peranamallur ,Brahmotsava ,Avaniapuram Lakshmi Narasimha temple ,Chitrai month.… ,
× RELATED திருப்பதியில் 5ம் நாள் பிரமோற்சவ விழா...