×
Saravana Stores

பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை

கரூர், ஏப். 30: தமிழகத்தில் உள்ள முதன்மையான கோயில்களில் கரூர் பசுபதிஸ்வரர் கோயில் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடத்தப்படுவதுண்டு. இந்த குரு பெயர்ச்சி நிகழ்ச்சி வரும் மே மாதம் 1ம் தேதி நடைபெறுகிறது. அதன்படி குரு பகவான் நாளை (மே 1ம் தேதி) மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி கரூர் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனாய கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நாளை (மே 1ம் தேதி) குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

அது சமயம் நவக்கிரக சன்னதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு சிறப்பு ஹோமங்கள், லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதையெட்டி விநாயகர் வழிபாடு, நவக்கிரக அபிஷேகம், சங்கல்பத்துடன் லட்சார்ச்சனை நேற்று முன் தினம் தொடங்கியது. 2வது நாளாக இன்றும் (ஏப். 30ம் தேதி) நவகிரஹ அபிஷேகம், லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

The post பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை appeared first on Dinakaran.

Tags : Laksharchana ,Guru ,Pasupadeeswarar temple ,Karur ,Karur Pashupatiswarar Temple ,Tamil Nadu ,Laksharchanai ,Guru Bairchi festival ,Laksharchan ,
× RELATED குரு பூஜையையொட்டி டாஸ்மாக் மூடல்