- பொள்ளாச்சி
- ஆனைமலை புலிகள் காப்பகம்
- பர்ஜவதேஜா
- Kallipatti
- கணக்கம்பட்டி
- பொள்ளாச்சி வனக் காவலர்
- தின மலர்
பொள்ளாச்சி, ஏப். 30: பொள்ளாச்சி அருகே காட்டு முயல் வேட்டையாடிய 10 பேரை வனத்துறையினர் கைது செய்து, ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர். பொள்ளாச்சியை அடுத்த கள்ளிப்பட்டி, கணக்கம்பட்டி பகுதிகளில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பார்ஜவதேஜா அறிவுறுத்தலின்படி, பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் சிலர் கூட்டமாக காட்டு முயல்களை வேட்டையாடி கொண்டிருப்பதை அறிந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், அங்கு காட்டு முயலை வேட்டையாடி கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். அவர்கள், அதே பகுதியை சேர்ந்த சின்னராசு (35), நாரகாஜ் (26), சதீஸ்குமார் (29), பிரகாஷ் (30), ஈஸ்வரன் (27), பசுபதி (29), நாகஅர்ஜூனன் (19), முருகன் (52), சக்திவேல் (27), தங்கவேல் (27) என தெரியவந்தது.
விசாரணையின்பொது அவர்கள், உளி கம்பிகளை உபயோகித்து காட்டு முயல்களை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, முயலை வேட்டையாடிய 10 பேரை கைது செய்ததுடன், வன உயரின தடுப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு நபருக்கும் தலா 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். உடுமலை, ஏப்.30: மடத்துக்குளம் ஒன்றிய தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு மடத்துக்குளத்தில் நடந்தது. அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தேர்தல் அலுவலர்களாக குமார், செல்வகணபதி ஆகியோர் இருந்தனர். இதில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் விவரம்: தலைவர் சாமியப்பன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சின்னத்துரை, துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, ராமலிங்கம், இணை செயலாளர்கள் மணிகண்டன், சண்முகசுந்தரம் ஆகியோர்.
The post காட்டு முயல் வேட்டையாடிய 10 பேர் கைது: ரூ.1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.