தாராபுரம், ஏப். 30: திருப்பூர் மாவட்டம் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் இந்திய கூட்டணியின் வேட்பாளராக பிரகாஷ் போட்டியிட்டார். திமுக கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ்க்கு வாக்குகள் சேகரித்தமைக்கு நன்றி கூறி இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள், தாராபுரம் சட்டமன்ற தொகுதி காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் தேர்தல் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், பூத் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கூட்டம் தாராபுரம் சிவரஞ்சனி மகாலில் நடைபெற்றது.
செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ், தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், காங்கயம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
பாராளுமன்ற தேர்தல் அறிவித்த நாள் முதல் உறக்க மின்றி திமுக வேட்பாளரின் வெற்றிக்காக பாடுபட்ட தாராபுரம் காங்கயம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், முஸ்லிம் லீக் உள்ளிட்ட தேர்தல் பணியாற்றிய அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவிப்பதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வேட்பாளர் பிரகாஷ் ஆகியோர் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.இதில் தாராபுரம் நகர கழகச் செயலாளர் முருகானந்தம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கனகராஜ், ரகுபதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.