×

டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட் செய்தது. பிரித்வி 13, பிரேசர் 12, ஹோப் 6 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த போரெல் 18, ரிஷப் பன்ட் 27, அக்சர் 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப… ஸ்டப்ஸ் 4, குஷாகரா 1, ரஷிக் சலாம் 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் அதிரடி காட்ட, டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. குல்தீப் 34 ரன் (26 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் 3, அரோரா, ஹர்ஷித் தலா 2, ஸ்டார்க், நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சால்ட் அதிகபட்சமாக 68 ரன், ஸ்ரையாஸ் ஐயர் 33 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

The post டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ் appeared first on Dinakaran.

Tags : Knight Riders ,Delhi ,Kolkata ,IPL league ,Delhi Capitals ,Eden Gardens ,Prithvi ,Fraser ,Dinakaran ,
× RELATED சுனில் நரைன் அதிரடி ஆட்டம் நைட் ரைடர்ஸ் முதலிடம்