×

23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் சப்ளை

தாம்பரம்: அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள குடிநீர் வசதிகள் செய்வது குறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை முன்னிட்டு, மாநகராட்சியின் சார்பில் 40 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் 23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.

இந்த பணிகளை அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடைகோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை மாநகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் களஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டு, அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் தொய்வின்றி கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தாம்பரம் மாநகராட்சியில் கோடை காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை தினசரி உறுதி செய்திடும் வகையில், குடிநீர் தேவைகள் நிறைவேற்றிடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படா வண்ணம் சீரான அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருநீர்மலை, பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் மூன்று தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே குடிநீர் வழங்கப்பட்டு வந்ததுபோல் கோடைகாலமான தற்போதும் தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

The post 23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் சப்ளை appeared first on Dinakaran.

Tags : ORS ,Tambaram ,Tambaram Corporation ,Primary ,Centers ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...