- ஐபிஎல்
- சவுகார்பேட்டை
- தண்டாயர்பேட்டை
- கூட்டு ஆணையாளர்
- வடக்கு மண்டலம்
- சவுகார்பேட்டை
- இணை ஆணையர்
- எஸ்ப்ளேனேட்
- போலீஸ் இன்ஸ்பெக்டர்
- முத்துச்செல்வன்
தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை பகுதியில் செல்போன் செயலி மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தப்படுவதாக, வடக்கு மண்டல இணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வடக்கு மண்டல இணை ஆணையர் உத்தரவின் பேரில் எஸ்பிளனேடு காவல் ஆய்வாளர் முத்துச்செல்வன் தலைமையில் தனிப்படை போலீசார் சவுகார்பேட்டை பெருமாள் முதலி தெருவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. அங்கிருந்த சந்தீப் (33), ராஜேஷ் குமார் ஜெயின் (33), தீரஜ் (44), கஜேஷ் (32) ஆகிய 4 பேர் மொபைல் செயலி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் பேரையும் எஸ்பிளனேடு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் ரொக்கம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து சவுகார்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் சூதாட்டத்தில் புழக்கத்தில் விட்டதும், இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இருந்துதான் கைதான கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் உள்ளார்களா என்பது குறித்து வடக்கு மண்டல இணை ஆணையரின் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் சவுகார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post சவுகார்பேட்டையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது: தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.