×

விபத்தில் 2 பேர் பலி

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் ஏரிக்கரை கன்னிகோயில் தெருவைச் சேர்ந்தவர் தயாளன் (35). ஆட்டோ டிரைவரான இவர் தனது நண்பர் நெல்லுக்கார தெருவைச் சேர்ந்த குமார் (50) என்பவருடன் ஆட்டோவில் ஓரிக்கையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழ்கேட் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து அதிவேகமாக வந்த லாரி, எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் தயாளன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் உயிரிழந்த தயாளன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dayalan ,Kanchipuram Lakeside Kanchipuram Street ,Orikai ,Kumar ,Nellukkara Street ,Kielgate ,
× RELATED காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராய தடுப்பு...