- ஜார்க்கண்ட்
- ஹேமந்த் சோரன்
- ராஞ்சி
- முன்னாள்
- முதல் அமைச்சர்
- ஹேமந்த் சோரன்
- அமலாக்க இயக்குநரகம்
- சம்பாய் சோரன்
- காண்டே சட்டமன்றத் தொகுதி
- ஜார்க்கண்ட் சட்டமன்றம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வர் பதவியேற்றார். ஜார்க்கண்டில் உள்ள கண்டே சட்ட பேரவை தொகுதி ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏவாக இருந்த சர்பிராஸ் அகமது கடந்த டிசம்பரில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் காலியாக உள்ள கண்டே பேரவை தொகுதி மே மாதம் 20ம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜார்க்கண்டில் மே 20ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன் கண்டே தொகுதி இடைதேர்தலும் நடக்கிறது. இந்நிலையில் கண்டே தொகுதி இடைதேர்தலில் போட்டியிட கல்பனா சோரன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
The post ஜார்க்கண்ட் பேரவை இடைதேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி வேட்புமனு appeared first on Dinakaran.