- திண்டுக்கல்
- மதுரை, கே.கே
- விஜயகிருஷ்ணன்
- திருச்சி சோமரசம்பேட்டை ரெங்காநகர்
- சாந்தினி பிரியா
- திருச்சி
- மல்லியம்பட்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
திண்டுக்கல்: மதுரை, கேகே நகரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில், திருச்சி சோமரசம்பேட்டை ரெங்கநகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்த விஜய்கிருஷ்ணன் சேர்மனாகவும், திருச்சி மல்லியம்பத்தை சேர்ந்த சாந்தினி பிரியா துணை சேர்மனாகவும் இருந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் உள்ளன. முதலீட்டுக்கு அதிக வட்டி உள்ளிட்ட பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து ஏராளமான முதலீடுகளைப் பெற்றுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ரூ8 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் விஜய்கிருஷ்ணன், சாந்தினி பிரியா இருவரும் தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் பேகம்பூர் சின்னபள்ளபட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். இதையடுத்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருந்த சேர்மன் விஜய்கிருஷ்ணனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சாந்தினி பிரியாவை தேடி வருகின்றனர்.
The post நிதி நிறுவனம் நடத்தி ரூ8 கோடி மோசடி: நிறுவனத் தலைவர் கைது appeared first on Dinakaran.