×

4வது சுற்றில் ரைபாகினா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 3வது சுற்றில் எகிப்தின் மயார் ஷெரிப் உடன் (27 வயது, 72வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (24 வயது, 4வது ரேங்க்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 30 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

The post 4வது சுற்றில் ரைபாகினா appeared first on Dinakaran.

Tags : Rybakina ,Madrid ,Kazakhstan ,Elana Rybakina ,Madrid Open Tennis Series ,Spain ,Egypt ,Mayar Sherif ,Dinakaran ,
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா