×
Saravana Stores

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயாவுடன் நேற்று மோதிய ரைபாகினா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டிலும் அவர் 3-0 என முந்திச் சென்ற நிலையில், காயம் காரணமாக கலின்ஸ்கயா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ரைபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 4வது சுற்றில் களமிறங்கிய எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜின்யு வாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஃபில்ஸ் சவாலை சந்தித்த அலெக்ஸ் டி மினார் (ஆஸி.) 6-2, 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். பிரான்சின் கியோவன்னி பெர்ரிகார்டுடன் மோதிய லாரன்ஸோ முசெட்டி (இத்தாலி) 4-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃப் – ஜெஸ்ஸிகா பெகுலா இணை 6-2, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானி – ஜாஸ்மின் பவோலினி ஜோடியை வீழ்த்தியது.

The post விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா appeared first on Dinakaran.

Tags : Rybakina ,Wimbledon ,London ,Kazakhstan ,Elana Rybakina ,Wimbledon tennis Grand Slam ,Russia ,Anna Kalinskaya ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!