×

டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா

புதுடெல்லி: டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அரவிந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில், டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு டெல்லி காங்கிரஸ் பிரிவு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் டெல்லி மேலிட தலைவர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்து ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேர்ந்திருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கட்சியின் டெல்லி பொறுப்பாளர் தீபக் பாப்ரியாவுடனான மோதலால் டெல்லி முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ராஜ்குமார் சவுகான் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

 

The post டெல்லி மாநில காங். தலைவர் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Delhi State Congress ,New Delhi ,Arvinder Singh Lovely ,president ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஏர்லைன்ஸ்களில் கலக்கும் ஏஐ;...