×

பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி

திருமலை: திருப்பதியில் நேற்று தரிசனம் செய்த நடிகை ஜெயப்பிரதா, பாஜ மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி அழைப்பு விடுத்தால் ஆந்திராவில் பிரசாரம் செய்வேன் என கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜெயப்பிரதா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், ‘ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என சுவாமியை வேண்டிக் கொண்டேன்.

பாஜ தலைமை என்னிடம் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை முறையாக நிறைவேற்றுவேன். பாஜக மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி அழைப்பு விடுத்தால் ஆந்திராவில் பிரசாரம் செய்வேன்’ என்றார். தெலுங்கு தேசம் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஜெயப்பிரதா, பின்னர் உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். அதன் பிறகு ஆர்எல்டியில் சேர்ந்தார். கடந்த 2019ல் ஜெயப்பிரதா பாஜகவில் இணைந்தார்.

The post பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Jayaprada ,Tirumala ,Jayapratha ,Tirupati ,Andhra Pradesh ,president ,Purandeshwari ,Swami ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...