திருவண்ணாமலை, ஏப்.28: திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை கால குடிநீர் தடுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு பெய்த தெற்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பின. ஆனாலும், மாவட்டத்தின் தேவையை முழுமையாக சமாளிக்கும் அளவில் இல்லை. எனவே, மாவட்டம் முழுவதும் அணைகள், ஏரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே கிடுகிடுவென வற்றத் தொடங்கிவிட்டது. எனவே, அக்னி நட்சத்திர கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு பரவலாக ஏற்படும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தவிக்கும் நிலை ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த ெதாடங்கியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில், 178 ஊராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அணைகள் மற்றும் ஆறுகளை சார்ந்து செயல்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா, போதுமான நீர் இருப்பு உள்ளதா, குடிநீர் விநிேயாகம் முறையாக நடைபெறுவகிறதா என அதிகாரிகள் தினமும் கண்காணிக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தரை கிணறு, ஆழ்துளை குழாய் கிணறு போன்ற நீராதாரங்களை மட்டுமே நம்பியுள்ள பெரும்பான்மையான கிராமங்களில், குடிநீர் விநிேயாகத்தை முறைபடுத்தவும், குடிநீர் வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோரை அழைத்து, குடிநீர் விநியோகத்தில் ஏதேனும சிக்கல் உள்ளதா என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேட்டறிந்து, நேரில் ஆய்வு செய்து முன்கூட்டியே பிரச்சனைகளை தீர்க்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நான்கு நகராட்சிகளிலும், கோடை காலம் முடியும் வரை குடிநீர் விநிேயாக பணிகளில் ஆணையாளர்கள் மற்றும் பொறியாளர்கள் தனி கவனம் ெசலுத்த வேண்டும், குடிநீர் திட்டப்பணிகளையும், குடிநீர் விநியோகத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
The post கோடைகால குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.