×

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஏப். 28: திருச்சி தென்னூர் பாரதிநகர் பகுதியில் வசித்து வந்தவர் சர்கேஷ்(19). இவர் புத்தூரில் உள்ள பிஷப் ஷீபர் கல்லூரியில் உயிர் தகவலியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார், இந்நிலையில் இவர் பகுதி நேரமாக உறையூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்து உள்ளார் இவருடைய நண்பர்கள் அனைவரும் நல்ல வருமானம் தரக்கூடிய வேலை பார்த்துக் கொண்டு வருவதாக தெரிகிறது. இதனால் தான் ஓட்டலில் பணிபுரிந்து வருகிறேன் என்ற ஒரு குறுகிய மனப்பான்மையுடன் மனதளவில் பாதிக்கப்பட்டு சமீப காலமாக இருந்துள்ளார்,

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், அவரது தாயார் தீபா அளித்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை முடிந்து அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Sarkesh ,Bharathinagar ,Thannoor, Trichy ,Bishop Scheeber College ,Puttur ,Varayur ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்