×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி

பெரம்பலூர்,மே9: பெரம்பலூரில் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி எம்.ஹசீன் சனோபர் 586 /600 (தமிழ் – 98, ஆங்கிலம் – 92, ெபாருளியல் – 98, காமர்ஸ் – 100, அக்கவுன்டன்சி – 99, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் – 99 ) மதிப்பெண்கள் பெற்று முதல் இடமும், ஜி.கோபிகா 560/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் எஸ். அனுசியா 559/600 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.மேலும் மாணவர்கள் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 100% தேர்ச்சி, 28க்கும் மேற்பட்ட மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை மாணவர்களை பள்ளித் தாளாளர் பாலச்சந்திரன் , துணைத்தாளாளர் , முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி மேற்படிப்பிற்கான வழிகாட்டுதலையும் வழங்கினர். சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளித் தாளாளர் , துணைத் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. கேஜி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு வரை 2024-25ம் கல்வி ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: ஸ்ரீஅம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sri Ambals Matric Higher Secondary School ,Perambalur ,M. Haseen Sanobar ,Sri Ambals Matric High School ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...