×
Saravana Stores

சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு

கரூர், ஏப். 27: சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவால் பாலத்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குகைவழிப்பாதை என்பது ரயில்வே துறையால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் மக்கள் ஆபத்தில்லாமல் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அமைத்துக் கொள்ளப்பட்ட ஒரு பாதையாகும் .இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கரூர் சனப்பிரட்டி ரயில்வே குகைவழிப்பாதை முறையாக அமைக்கப்பட்டது. தற்போது அதில் அடிக்கடி மழை நீராலும், சாக்கடை நீரும் கசிவு ஏற்படுவதால் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும், உடல் ஊனமும் ஏற்படுகிறது.

அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேலைக்கு சென்று வருவதற்கு இந்த பாதையை தான் பயன்படுத்துகின்றனர். பசுபதிபாளையம் வடக்கு காந்திகிராமம், கரூர் மக்கள் அடிக்கடி செல்லும் பகுதி என்பதால் இது ஒரு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் சரி செய்ய முன்வர வேண்டும். சனப் பிரட்டி ரயில்வே குகை வழிப் பாதையின் வழியே தண்ணீர் கசிவு ஏற்ப்படுவதால் பாசனம் பிடித்து உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக இரு சக்கர வாகணங்களில் செல்லுபவர் தடுமாறி கிழே விழுந்து விபத்து ஏற்ப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு appeared first on Dinakaran.

Tags : Sanapratti Cave ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர்- முக்கணாங்குறிச்சி இடையே சாலை...