கரூர், ஏப். 27: கரூரில் சின்ன வெங்காயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கிலோ ரூ.15க்கு கிடைப்பதால் குடும்ப பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாம் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய உணவுகளில் சின்ன வெங்காயம் ஒன்றாகும். சின்ன வெங்காயத்தில் மருத்துவ சக்தி அதிகம் உள்ளது இதில் வைட்டமின் சி ,ஏ, துத்தநதம் பாஸ்பரஸ், இரும்பு சத்து மெக்னீசியம் ,துத்தநாகம் ஆகிய சத்துக்கள் நிறைந்த சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்ய தமிழ்நாட்டில் தேனி ப்பட குறிப்பதிண்டக்கல், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர் மாவட்டத்தில் ஜெகதாவி வெள்ளியணை, கடவூர் ஆகிய சில தோட்டக்காடுகளில் பயிர் செய்யப்படுகிறது உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மேல் சின்ன வெங்காய சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 3-4 லட்சம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. வெங்காய விதை உற்பத்தி 80 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்ய முடியும். பல்லாரி வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் அதிக மருத்துவ குணம் நோய் எதிர்ப்பும் மண்டலத்தை அதிகப்படுத்தும் சக்தி உள்ளதால்பொதுமக்கள் அதனை விரும்பி வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். தற்போது கிலோ 15 முதல் 20 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதால்மக்கள் அதிக அளவில் வாங்கி வீடுகளில் அடிக்கடி கார குழம்பு பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது.
The post கரூரில் சின்ன வெங்காயம் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.