×

தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ

கூடலூர்,ஏப்.27: கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாலையோர வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் காட்டுமாடு ஒன்று இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். இது குறித்து வனச்சரகர் விஜய் மற்றும் வனத்துறையினர் மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனை தொடர்ந்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் வனத்துறையினர் இறந்த காட்டு மாட்டை உடற் கூராய்வு செய்தனர். சுமார் 15 வயது ஆண் காட்டுமாடு வயது முதிர்வு காரணமாகவும், பற்கள் தேய்ந்து சரியாக உணவு உண்ண முடியாத காரணத்தாலும் இருந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ appeared first on Dinakaran.

Tags : Tottapetta forest ,Kudalur ,Karkudi Forest Reserve ,Mudumalai Tiger Reserve ,Vanacharakar Vijay ,Thottapetta forest ,Dinakaran ,
× RELATED கூடலூர் பகுதியில் தொடரும் கன மழையால்...