×
Saravana Stores

பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வெள்ளக்கோவில், ஏப்.27: வெள்ளக்கோவில், உப்புபாளையத்தில் உள்ள பொய்யாமொழி விநாயகர் மற்றும் மலையம்மன் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த 25ம் தேதி காலை 7 மணிக்கு மங்கள இசையுடன், விகேஸ்வர பூஜை, தன பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பொய்யாமொழி விநாயகர் கோபுர கும்பாபிஷேகமும் பொய்யாமொழி விநாயகர் மூலவர் மகா கும்பாபிஷேகம், தீபாரானை, பிரசாதம் தீர்த்தம் வழங்கப்பட்டது.

பின்னர் 9.30 மணிக்கு மலையம்மன் கோயில் விமான கோபுர கும்பாபிஷேகமும், மூலவர் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகமும் அலங்காரம் தச தரிசனம், முளைபாலிகை நதியில் சேர்த்தல் நடைபெற்றது. விழாவையொட்டி பக்கதர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Poiyamozhi Vinayagar ,Malayamman Temple Kumbabhishekam ,Vellakovil ,Malayamman Temples ,Vellakovil, Upupalayam ,Kumbabhishek ,Vikeswara Puja ,Dhana ,Malayamman ,Temple Kumbabhishekam ,
× RELATED வெள்ளகோவிலில் முருங்கை விலை உயர்வு:கிலோ ரூ.62க்கு விற்பனை