வந்தவாசி, ஏப்.27: வெயில் நேரத்தில் கர்ப்பிணிகள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என செய்யாறு சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் அறிவுறுத்தினார். வந்தவாசி அடுத்த கொவளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. மருத்துவர் ஜனனி தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் லீலா வினோதன் வரவேற்றார். முகாமில் செய்யாறு சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசுகையில், கோடை வெயில் அதிகமாக உள்ளதால் கர்ப்பிணிகள் வெயில் நேரத்தில் உறவினர் துணையுடன்தான் வெளியே செல்ல வேண்டும். தனியாக செல்லக்கூடாது. தண்ணீர் அதிக அளவில் பருக வேண்டும். 7 மாதம் முதல் கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்வதால் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, கர்ப்பிணி தாய்மார்கள் இதனை பின்பற்ற வேண்டும் என்றார். முன்னதாக கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
The post கர்ப்பிணிகள் தனியாக வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.