லாகூர்: பாகிஸ்தான் அணியுடனான 4வது டி20 போட்டியில், 4 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற நியூசிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது. கடாஃபி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச… நியூசிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ராபின்சன் 51, பிளண்டெல் 28, பாக்ஸ்கிராப்ட் 34, கேப்யன் பிரேஸ்வெல் 27 ரன் விளாசினர். பாக். பந்துவீச்சில் அப்பாஸ் அப்ரிடி 3, ஆமிர், ஸமான் கான், உசாமா, இப்திகார் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
பகார் ஸமான் அதிகபட்சமாக 61 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். இப்திகார் 23, இமத் வாசிம் 22*, அயூப் 20, உஸ்மான் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். கேப்டன் பாபர் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். நியூசி. பந்துவீச்சில் ஓ’ரூர்கே 3, பென் சியர்ஸ் 2, பிரேஸ்வெல், நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரூர்கே ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து 2-1 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டி20 லாகூரில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.
The post 4வது டி20ல் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து appeared first on Dinakaran.