- பாஜக
- தேஜஸ்வி சூர்யா
- பெங்களூரு
- பெங்களூரு தெற்கு தொகுதி
- கர்நாடக
- பெங்களூரு தெற்கு
- தொகுதியில்
- தேஜாஷ்வி சூர்யா
பெங்களூரு: பெங்களூரு தெற்கு தொகுதி பாஜ எம்.பியும் அத்தொகுதி பாஜ வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யா மத அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நேற்று 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. பெங்களூரு தெற்கு தொகுதி பாஜ எம்.பியும், வேட்பாளருமான தேஜஸ்வி சூர்யா ஜெயநகரில் அவரது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அளித்த பேட்டியில், மொத்த வாக்காளர்களில் பாஜ ஆதரவு வாக்காளர்கள் தான் 80 சதவீதம் பேர். ஆனால் அதில் 20 சதவீதம் பேர் மட்டுமே வந்து வாக்களிக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்காளர்கள் தான் உள்ளனர். அதில் 80 சதவீதம் பேர் வாக்களிக்கின்றனர்.
இதுதான் நடப்பு நிலவரம். எனவே தயவுசெய்து வந்து வாக்களியுங்கள். நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், காங்கிரஸ் வாக்காளர்கள் 20 சதவீதம் பேரும் முழுமையாக வாக்கு செலுத்துவார்கள் என பேசியிருந்தார். அந்த வீடியோவை தேஜஸ்வி சூர்யா அவரது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மதத்தை வைத்து பிரசாரம் ெசய்ததாக பாஜ மூத்த தலைவர் சி.டி.ரவி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.
The post பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு appeared first on Dinakaran.