×

பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு: குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை

டெல்லி: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7-ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண், 2016 19 காலத்தில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பிரிஜ் பூஷண் மீதான புகாரில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீது வழக்கு தொடரப்பட்டது. கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரிஜ் பூஷண் கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல் வழக்கு: குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Tags : Bajaka M. B. ,Brij Bhushan ,Delhi ,Bajaka M. B. A ,court ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!