×

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்

சென்னை: வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும். மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி, சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியது.

The post வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Directorate of Occupational Safety and Health ,CHENNAI ,Directorate of Industrial Safety and Health ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...