- காங்கிரஸ்
- ராகுல் காந்தி
- தில்லி
- மக்களவைத் தேர்தல்
- கேரளா
- கர்நாடக
- ராகுல்
- ஓம் பிர்லா
- சசிதரூர்
- குமாரசாமி
- ஹேமா மாலினி
- 18வது லோக்சபா தேர்தல்…
டெல்லி: மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராகுல், ஓம்பிர்லா, சசிதரூர், குமாரசாமி, ஹேமமாலினி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது. 2ம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் ஏப்.26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் அசோக் பாலவி இறந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் மே 7ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீதம் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இந்த 88 தொகுதிகளில் மொத்தம் 1202 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 1098 ஆண்கள், 102 பேர் பெண் வேட்பாளர்கள். இந்நிலையில் ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ளச் செய்தியில்,”நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று. அடுத்த அரசாங்கம் சில பில்லியனர்களின் ஆட்சியா? 140 கோடிஇந்தியர்களின் ஆட்சியா என்பதை உங்கள் வாக்கு தீர்மானிக்கும். வீட்டை விட்டு வெளியே வந்து அரசியலமைப்பு சட்டத்தின் சிப்பாய் ஆகி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.