- திண்டிவன்
- திண்டிவனத்தில்
- உணவு வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு
- திண்டிவனம்…
- திண்டிவனம்
- தின மலர்
திண்டிவனம், ஏப்.26: திண்டிவனம் தனியார் ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி 4 டன் அளவில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், ரைஸ்மில்லை சோதனை செய்து குற்றவாளியை கைது செய்தனர். திண்டிவனம் சென்னை மெயின் ரோட்டில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் 4 டன் அளவில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேரில் சென்று ரைஸ்மில்லில் சோதனை செய்தனர். அப்போது ரைஸ்மில்லின் உள்ளே 60க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வைத்திருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த ரைஸ்மில்லில் நூதன மோசடியாக நல்ல அரிசியுடன் ரேஷன் அரிசியை கலந்து அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கலப்படம் செய்து விற்பனை செய்துள்ளனர். விசாரணையில் இது தெரியவந்ததையடுத்து 3.5 டன் அளவிலான ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரைஸ்மில்லை குத்தகைக்கு எடுத்து ரேஷன் அரிசி கலப்படம் செய்து விற்பனை செய்து வந்த திண்டிவனம் டி.வி நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சேகர்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
The post திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.