புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ பாஜ கட்சி தனக்கு சாதமாக உருவாக்கியுள்ள ஆடுகளத்தில் காங்கிரஸ் விளையாட தயாரில்லை. ஆனால், வேலையின்மை,விலைவாசிகள் உயர்வு போன்ற பிரச்னைகளை மையமாக கொண்டுள்ள ஆடுகளத்திற்கு வர தயாராக உள்ளது. மக்களவை முதல் கட்ட தேர்தலில் ஆளும் கட்சி சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டது என தகவல்கள் வந்துள்ளன.அதனால் எங்கள் தேர்தல் அறிக்கைக்கு வகுப்புவாத சாயம் பூச முயன்றார். இவ்வாறு அவர் எங்களுடைய தேர்தல் அறிக்கைக்கு விளம்பரம் கொடுக்கிறார். ஒற்றுமை நீதி யாத்திரையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் இந்த முறை 400 சீட் இலக்கு, இது மோடியின் உத்தரவாதம் என்று பேசிய அவர் இப்போது அதை நிறுத்தி விட்டார். மக்களை பிளவுபடுத்தும் புதிய மொழியை பேசுகிறார். எப்போதும் மக்களை பிளவுபடுத்துவதை ஒரு ஆயுதமாக அவர் பயன்படுத்தினார். இப்போது மிகவும் வெளிப்படையாக பிளவுபடுத்தும் மொழியை பேசுகிறார். பரம்பரை சொத்து்கான வரியை கடந்த 1985ல் ராஜிவ் காந்தி ஒழித்தார். அப்போது இதற்கு ஆதரவாக பாஜவின் அருண் ஜெட்லி, ஜெயந்த் சின்கா ஆகியோர் பேசினர். பரம்பரை சொத்து வரியை அமல்படுத்துவது பாஜவின் திட்டமாகும். அதே போல் சொத்துகள் மறு பங்கீடு செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை மோடியால் காட்ட முடியுமா’’ என்று கேள்வி எழுப்பினார்.
The post காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளம்பரப்படுத்தும் மோடி: ஜெய்ராம் ரமேஷ் கருத்து appeared first on Dinakaran.