- மோடி
- பி. சிதம்பரம்
- புது தில்லி
- தலைவர்
- தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு
- காங்கிரஸ் கட்சி
- பாஜக
- காங்கிரஸ்
- தின மலர்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவரான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘காங்கிரஸ் கட்சியின் 2024ம் ஆண்டு தேர்தல் அறிக்கையால் பாஜ திக்குமுக்காடி போனது வெளிப்படையாக தெரிகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்வத்தின் மறுபங்கீடு மற்றும் பரம்பரை சொத்து வரி குறித்த சமீபத்திய சர்ச்சைகள் பாஜவின் அச்சத்தின் வெளிப்பாடாகும். ஆனால் இவை குறித்து தேர்தல் அறிக்கையில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது, வேலை, செல்வம் மற்றும் நலன் ஆகிய மூன்று மந்திர வார்த்தைகளை அடிப்படையாக கொண்டது.காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பேசுபொருளாகிவிட்டது. துரதிஷ்டவசமாக பாஜவின் மோடி உத்தரவாதம் தடயமில்லாமல் மறைந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.