×

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

பீகார்: பீகாரில் சொகுசு விடுதி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி சொகுசு விடுதியில் திடீரென பற்றிய தீ மளமள வென பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ராட்சத கிரேன் உதவியோடு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த போராடினர்.

கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டடத்தில் சிக்கிய மேலும் சிலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவலின் படி விடுதியில் உள்ள கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Patna train station ,Bihar ,Patna railway station ,
× RELATED நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ