- நெல்லியலம் நகராட்சி அலுவலகம்
- Pandalur
- கைதகொல்லி அரசு பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி
- 16 வது வார்டு
- நெல்லியாலம் நகராட்சி
- நீலகிரி மாவட்டம் பந்தலூர்...
- தின மலர்
பந்தலூர்: குடிநீர் கேட்டு நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி 16ம் வார்டு கைதகொல்லி அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி அருகே 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை எனவும், அப்பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு கேட்டு நெல்லியாளம் நகராட்சிக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதற்கு நெல்லியாளம் நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வரும் நிலையில் அதுவும் தங்களுக்கு கிடைப்பதில்லை என கூறி நேற்று காலை அப்பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் செல்வராணி தலையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தேவாலா போலீசார் மற்றும் பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்று போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் பொதுமக்கள், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறி போராட்டகாரர்களை நகராட்சி அலுவலகத்திற்குள் சென்றனர். பின்னர், ஆணையாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேவாலா காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கமேஷ்வரன் மற்றும் அதிமுக நகர செயலாளர் ராஜா, கவுன்சிலர் செல்வராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆணையாளர் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் 5 பேருக்கு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி சமாதானம் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பந்தலூர்,ஏப்.25: பந்தலூர் அருகே குதிரைவட்டம் கோழிப்பண்ணை மற்றும் சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சத்திய நாராயணன் மேற்பார்வையில், நோய் தடுப்பு உதவி இயக்குனர் நாசர் உதவி இயக்குனர் கூடலூர் சத்திவேல், கால்நடை உதவி மருத்துவர் ரஞ்சித்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் நேற்று நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல், நம்பியார்குன்னு சோதனைச்சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் கோழிகள், முட்டைகள், எச்சங்களை ஏற்றிவரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், அய்யன்கொல்லி குதிரைவட்டம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையை ஆய்வு செய்து அங்கிருந்தவர்களிடம் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து உரிய ஆலோசனை வழங்கினர். கோழிகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
The post நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் முற்றுகை வாசிப்பு பழக்கம் சமூக அக்கறை உடையவராக நிச்சயம் மாற்றும் கேரளாவில் பறவை காய்ச்சல்: பந்தலூர் கோழி பண்ணைகளில் ஆய்வு appeared first on Dinakaran.