×

மரம் ஒடிந்து விழுந்து கார் சேதம்

திருவாடானை, ஏப்.25: திருவாடானையில் தொண்டி மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு வேலை நிமிர்த்தமாக வந்து செல்கின்றனர். நேற்று மாலை தாலுகா அலுவலகத்திற்கு வந்த சிலர் அலுவலகம் முன்பாக உள்ள மரத்தடியில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர். அப்போது திடீரென சூறைக்காற்று வீசியதில் அங்குள்ள அரசமரம் கொம்பு ஒன்று ஒடிந்து காரின் மீது விழுந்தது. இதனால் பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். இதில் காரின் கண்ணாடி மற்றும் மேற்கூரை பகுதி சேதடைந்திருந்தது. அதிக மக்கள் வந்து செல்லும் இடத்தில் திடீரென மரம் ஒடிந்து விழுந்தது சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மரம் ஒடிந்து விழுந்து கார் சேதம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Taluka ,Thondi Madurai National Highway ,Dinakaran ,
× RELATED கடற்கரை கிராமங்களில் குடிநீர்...