×
Saravana Stores

மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை, ஏப்.25: மெட்ரோ ரயில் பணிகளுக்காக பிரதான குடிநீர் குழாய் மாற்றியமைக்கப்பட உள்ளதால் இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், இரண்டு நாட்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் (போரூர் சந்திப்பு) குடிநீர் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இன்று இரவு 9 மணி முதல் வரும் 27ம்தேதி இரவு 9 மணி வரை (2 நாட்கள்) அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Drinking water board ,Chennai ,Chennai Water Board ,Dinakaran ,
× RELATED வளரசவாக்கம் மண்டலத்தில் கழிவுநீர்...