×

அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

டெல்லி: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி.26ல் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் இன்னும் தீர்ப்பு தராததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி 26ல் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜார்க்கண்ட் ஐகோர்ட் இன்னும் தீர்ப்பு தராததால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

The post அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chief Minister ,Hemant Soran ,Supreme Court ,Enforcement ,Directorate ,Delhi ,Former ,Enforcement Directorate ,Jharkhand High Court ,Dinakaran ,
× RELATED சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அரியானா முதல்வர் வெற்றி: கல்பனா சோரன் அபாரம்