×
Saravana Stores

வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைப்பு வெயிலுக்கு பயப்படாமல் தங்களின் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும்

*பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணையர் உத்தரவு

சித்தூர் : வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலுக்கு பயப்படாமல் தங்களின் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும். இதற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையர் அருணா உத்தரவிட்டுள்ளார். சித்தூர் மாநகராட்சி ஆணையர் அருணா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறும் தேர்தலில் பொதுமக்களிடையே மாநகராட்சி அதிகாரிகள் உங்கள் வாக்கு எங்கள் பொறுப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து பிரசாரம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாநகரத்தில் உள்ள 50 வார்டுகளில் உங்கள் வாக்கு எங்கள் பொறுப்பு திட்டம் மூலம், விழிப்புணர்வு வீடியோக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரி மோகன் வழிகாட்டுதலின் கீழ் வாக்குச்சாவடிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குடிநீர், நிழல், கழிப்பறை, உதவி மையம், சுகாதார மையம் ஆகியவை ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் கோடை காலத்தை முன்னிட்டு வெயிலுக்கு பயந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களின் பொன்னான வாக்குகளை பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது. மே 13ம் தேதி நடைபெறும் தேர்தலில் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வாக்கு சாவடிகளில் பொது மக்களுக்கு அதாவது வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே வெயிலுக்கு பயப்படாமல் வீட்டை விட்டு வெளியே வந்து தங்களின் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பேசினார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் அலர் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைப்பு வெயிலுக்கு பயப்படாமல் தங்களின் வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Commissioner ,Aruna ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மழை பாதிப்பை...