கரூர், ஏப். 24: கரூர் பேருந்து நிலையம் ரவுண்டாணா அருகே கால்நடைகள் சுற்றி திரிவதால் போக்கு வரத்துக்கு இடையுறு ஏற்ப்பட்டது மாநகராட்சி நிர்வாகம் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு: கரூரில் எப்போதுமே போக்குவரத்து மிகவும் பிசியாக காணப்படும். குறிப்பாக கரூரில் கால்நடை வளர்க்கும் பொதுமக்கள் தாங்கள் வீட்டிலேயே முழுமையாக கால்நடைகளுக்கு தீவனம் கொடுக்காமல் ரோடுகளுக்கு அவிழ்த்து விடுவதால் கால்நடைகளும் சுதந்திரமாக சுற்றி தெரிகின்றன. கால்நடைகள் மனிதனுக்கு தேவையான பால்வளத்தை கொடுக்கிறது இது வரவேற்கக் கூடிய ஒன்று. அதே சமயம் கால்நடை வளர்ப்பு உரிமையாளர்கள் கால்நடைகளுக்கு வீடுகளில் தீவனம் வாங்கி பராமரித்து வளர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதை மீறி கால்நடைகளை ரோடுகளில் மேச்சலுக்கு அவிழ்த்து விட்டால் சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள் கால்நடைகளை கண்காணித்தால் விபத்துகளை குறைக்க ஏதுவாக இருக்கும். இதனை பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள் appeared first on Dinakaran.