×
Saravana Stores

கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்

மங்கலம்பேட்டை, ஏப். 24: கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்கி கொண்ட பாஜ, அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த குருவன்குப்பம் ரோட்டு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(38). பாஜ ஒன்றிய பொருளாளர். அதே ஊரை சேர்ந்த கோவிந்தசாமி மகன் தேவேந்திரன்(53). அ.தி.மு.க உறுப்பினர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, தேவேந்திரனின் உறவினர் முருகன் மகன் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் ஓட்டை போடச் சென்றபோது, அதனை இளையபெருமாள் மகன் பாஜ ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்து தடுத்துள்ளார்.

அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் தேவேந்திரன் உறவினர் செல்வக்குமார் மணிகண்டனை கன்னத்தில் அறைந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் உறவினர்களான ராமசாமி மகன்கள் ராஜாராமன், ராஜேந்திரன், வீரபத்திரன் உள்ளிட்டோர் சேர்ந்து, தேவேந்திரன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். அதில் தேவேந்திரன், அவரது மனைவி கற்பகவல்லி, மகள் ராணி, பேத்தி ஆகியோர் காயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தேவேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பாஜ ஒன்றிய செயலாளர இளையபெருமாள் மகன் மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் ராமசாமி மகன் மணிகண்டன், ஏழுமலை, எழில் மற்றும் சிலர் மீதும், பாஜ ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், அவரது மனைவி சின்னபொண்ணு, ஆதரவாளர்கள் செல்வகுமார், தேவேந்திரன், ராஜவேல், அகிலரசன் ஆகியோர் மீதும் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Mangalampet ,BJP ,AIADMK ,Ramasamy ,Guruvankuppam road street ,Mangalampet, Cuddalore district ,Dinakaran ,
× RELATED லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!