×

கெஜ்ரிவால், கவிதாவுக்கு மே.7 வரை காவல் நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சி தலைவருமான கவிதா ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா அமர்வின் முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவரின் நீதிமன்ற காவலை மே மாதம் 7ம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்தமுறை கெஜ்ரிவால் மற்றும் கவிதா இருவரையும் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தலாம் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.

 

The post கெஜ்ரிவால், கவிதாவுக்கு மே.7 வரை காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Kavita ,New Delhi ,Delhi ,Chief Minister ,Chandrasekhara Rao ,PRS ,Kavitha ,CBI ,Court ,Judge ,Kaveri Baweja ,
× RELATED கெஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு