- வியாசரபாடி கலவரம்
- பெரம்பூர்
- நந்தா
- வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் வீட்டு வசதி வாரியம்
- சென்னை
- வியாசர்பாடி
பெரம்பூர்: செல்போனில் பேசிய சிறுவன் உள்பட 3 பேரை சரமாரியாக வெட்டிய 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் நந்தா (17). இவர் ஐடிஐ படித்துள்ளார். இவரது தந்தை ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்றுவிட்டார். இதனால் நந்தா தனது தாய்மாமன் மகன் தயாள்ராஜ், பாட்டி மேனகா ஆகியோருடன் வசித்துள்ளார்.
நேற்றிரவு 11 மணி அளவில் அங்குள்ள எச் பிளாக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நந்தா தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வந்த 10 பேர், நந்தாவை சுற்றிவளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க சென்ற தயாள்ராஜ், மேனகா ஆகியோரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுசம்பந்தமாக எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சிறுவன் உள்பட 3 பேரை எதற்காக வெட்டினர் என்று விசாரிக்கின்றனர்.
The post செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது சிறுவன் உட்பட 3 பேருக்கு வெட்டு: வியாசர்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.