×

கேரளாவில் எதிர்க்கட்சியினர் தாக்கியதாக கூறிய பாஜக வேட்பாளரின் நாடகம் அம்பலம்!!

கேரளா: கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதாக கொல்லம் பாஜக வேட்பாளரும் நடிகருமான கிருஷ்ணகுமாரின் நாடகம் அம்பலமானது. எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பிளாஸ்திரியுடன் கிருஷ்ணகுமார் புகைப்படம் வெளியிட்டிருந்தார். தவறுதலாக ஏற்பட்ட காயத்தை எதிர்க்கட்சியினர் தாக்கியதாக கிருஷ்ணகுமார் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. பாஜக தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகுமார் நாடகமாடியது தெரிய வந்தது. தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக பாஜக தொண்டர் சனல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

The post கேரளாவில் எதிர்க்கட்சியினர் தாக்கியதாக கூறிய பாஜக வேட்பாளரின் நாடகம் அம்பலம்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Kerala ,Kollam ,Krishna Kumar ,Kṛṣṇa Kumar ,
× RELATED இணையமைச்சர் பதவி வழங்கியதால் அதிருப்தி சுரேஷ்கோபி பதவி விலகத் திட்டம்?