- மக்களவைத் தேர்தல்
- கேரளா
- கர்நாடக
- மக்களவை
- ஆந்திரப் பிரதேசம்
- சென்னை
- லோக்சபா தேர்தல் 2024
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை தேர்தல் ஆந்திராவில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்டமாக அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலும் ஆந்திரப் பிரதேச மாநில மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் கீழ் காணும் நாட்களில் நடைபெறவுள்ளது.
கேரளாவில் 26/04/2024 அன்றும் ஆந்திரப்பிரதேசம் 13/05/2024 அன்றும் தேர்தல் நடைபெறும். கர்நாடகாவில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது முதற்கட்டம் 26/04/2024 அன்றும் இரண்டாம் கட்டம் 07/05/2024 அன்றும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள். உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள். பிடி மற்றும் சுருட்டு நிறுவணங்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிவங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிகாளர்களுக்கும் அவர்கள்தம் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க எதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, 135(B)-ன் கீழ் அந்தந்த தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
மேற்கண்ட தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிவங்களில் ஓட்டுரிமை உ தொழிலாளர்கள் புகார் அளிக்க ஏதுவாக தொழிலாளர் துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் சென்னை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது
மாநில கட்டுப்பாடு அறைகளுக்கு அதிகாரிகளை நியமித்துள்ளனர் தொழிலாளர் இணை ஆணையர் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் 9445398801: 044-24335107 என்ற என்களிலும், முதல் வட்டத்தில் உள்ளவர்கள் 7010275131: 044-24330354: என்ற என்களிலும், இரண்டாம் வட்டத்தில் உள்ளவர்கள் 8220613777: 044-24322749 என்ற என்களிலும், மூன்றாம் வட்டத்தில் உள்ளவர்கள் 9043555123, 044-24322750 ஆகிய எண்களிலும் தகவல், புகார் தெரிவிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு தொழிலாளர் துணை ஆய்வாளர் 1 வது வட்டத்தில் உள்ளவர்கள் 9840829835 044-24330354 என்ற தொலைபேசி என்களிலும், 6வது வட்டத்தில் உள்ளவர்கள் 9790930846: 044-24330354 என்ற எண்களிலும், 9வது வட்டத்தில் உள்ளவர்கள் 9884264814: 044-24330354 என்ற எண்களிலும் ஏதேனும் தகவல் மற்றும் புகார்கள் தெரிவிக்கலாம் என்று மேற்கண்ட தகவல்களை ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தொழிலாளர் ஆணையர் (பொறுப்பு) எ.சுந்தரவல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.
The post கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை தேர்தல் ஆந்திராவில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.