×

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல்சாகுபடி

*வறட்சியால் கடந்தாண்டை விட பரப்பளவு குறைவு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் இது வரை 15 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக கடந்தாண்டை விட நடப்பாண்டு கோடை சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.அதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சுமார் 2 லட்சம் ஏக்கரில், சம்பா 2.96 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது நிலத்தடி நீர் வசதி உள்ள பம்பு செட் வைத்துள்ள விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம், ஒ ரத்தநாடு அம்மாபேட்டை, தஞ்சாவூர் வட்டாரங்களில் அதிக அளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 15000 ஏக்கரில் நடவு பணிகள் நடந்துள்ளது. கடந்தாண்டு சுமார் 32,000 ஏக்கரில் கோடைனல் சாகுபடி நடைபெற்றது.

கடும் வறட்சி, ஆறுகளில் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் நிலை, மழை இல்லாமல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீரை மட்டும் நம்பி கோடை சாகுபடி செய்ய விவசாயிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு 32,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் தற்போது வரை 15,000 ஏப்ரல் மட்டும் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

இருப்பினும் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு கோடை சாகுபடி கடும் வறட்சியின் காரணமாக குறைந்துள்ளது நெல் உற்பத்தியை பாதிக்கும் என இருப்பினும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பம்பு செட் மூலம் கோடை நெல் சாகுபடி நடை பெற்று வருகிறது.

ஆழ்குழாய்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நிலங்களை தயார் செய்துள்ள விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து நடவு பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர். ஒரு சில இடங்களில் விவசாய கூலி தொழிலாளர்களை வைத்து நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்னும் சுமார் 5,000 ஏக்கர் வரை சாகுபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை சாகுபடி கடும் வறட்சியின் காரணமாக குறைந்துள்ளது நெல் உற்பத்தியை பாதிக்கும் என இருப்பினும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பம்பு செட் மூலம் கோடை நெல் சாகுபடி நடை பெற்று வருகிறது. ஆழ்குழாய்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நிலங்களை தயார் செய்துள்ள விவசாயிகள் பாய் நாற்றங்கால் அமைத்து நடவு பணிகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 15 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல்சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Cauvery ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...