சென்னை: மகாவீர் ஜெயந்தியன்று நேற்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரிடம் பணம் பறித்ததாக காவலர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. சென்னை அடுத்த மணிமங்கலத்தில் மதுவிற்பனை செய்த பெருமாள் என்பவரிடம் தனிப்படை காவலர்கள் ரூ.24,000 பறித்துள்ளனர். வழக்கு பதியாமல் இருக்க தனிப்படை காவலர்கள் சங்கர், கணேஷ், ஆனந்தராஜ் மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்துள்ளது. பணம் பறித்த காவலர்களிடம் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்கள் 3 பேரும் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில் மீண்டும் சிக்கியுள்ளனர்.
The post சென்னையில் மது விற்பனை செய்தவரிடம் பணம் பறிப்பு: காவலர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.