நாமக்கல்: நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேந்தமங்கலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பா.ஜ.க துணை தலைவர் செல்லமுத்து, பெண்ணை தாக்கி 3 சவரன் நகையை பறித்தார். படத்தையான் குட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் செல்லமுத்துக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. 2016ம் ஆண்டு ராமசாமியின் மனைவியை தாக்கி 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
The post நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.