×

விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

பட்டுக்கோட்டை, ஏப்.23: சிவாலயங்களில் மிகவும் பழமைவாய்ந்தது பட்டுக்கோட்டையில் காசாங்குளம் பகுதியில் உள்ள விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி கோயில். இக்கோயிலில நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு மஞ்சள் பொடி, திரவிய பொடி, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, கரும்பு சாறு, சொர்ணாபிஷேகம், பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மஹா நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, பச்சரிசி, வெல்லம்நெய்வேத்தியம் செய்துவில்வ அர்ச்சனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதசுவாமிபல்லக்கில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். பிரதோஷ வழிபாட்டில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

The post விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Viswanathaswamy Temple ,Pattukottai ,Visalakshi Udanurai Viswanatha Swamy Temple ,Kasangkulam ,Lord ,Nandi ,
× RELATED பட்டுக்கோட்டை தொகுதிக்கு வளர்ச்சி...